Monday, January 11, 2016

கருவிழிகளின் தாக்குதலால் ஏற்பட்ட விளைவு.....!

கவிதைப்போர் நடக்கும்பொழுது முதலில் தோற்பது என் எழுதுகோல், இரண்டாவது என் கைகள், மூன்றாவது என் கண்கள், நான்காவது என் இதயம்.....உன் கண்களால்!

உன் கண்கள் எத்தனை தடவை என்னை பார்த்தாலும் அத்தனை முறையும் என் இதயம் கொஞ்சம் நின்று ரசித்துவிட்டு நீ சென்றதும் பிரிவை எண்ணி துடிக்கிறது.!.

கருப்பு வெள்ளை பூக்கள் நிறைந்த கண்கள் என்னை கொன்று புதைக்க எத்தனிக்கும் போதெல்லாம் நான் மெல்ல நகர்கிறேன், தப்பிக்க வழிதேடியே!

கண்கள் சராமாரியாக தாக்கியதால் பரபரப்பு பற்றிக்கொண்டது என் நெஞ்சில்!

நிந்தித்து என் மனம் நோகாமல் என் உயிரை கடத்துகிறது உன் கண்கள்.!.

தீட்டிய கருவிழிகள் திருடியது என் வயதை!

கண்கள் இரண்டும் கரட்டு மேட்டில் என்னை கிடப்பில் போட்டது.!.

காணாத என் கண்கள் காற்றில் ஆடும் மரக்கிளையாய் உன்னை தேடி சாய்ந்து சாய்ந்து பார்க்கின்றது...!

கருவிழிகள் காதலினை வீசி வயதை பந்தாடி ஒரு வழியாக இன்புறுமோ அதை மட்டும் மனதில் எண்ணி.!.

என் விழிகள் காணும் ஓவியங்கள் அனைத்தும் உயிர்பெற்று தவிக்கின்றன, ஏன் எனக்கு உயிர் கொடுத்து ரசித்தே வதைக்கின்றாய் என்று!

என்னை நிற்க வைத்தது நிற்கதியாய் அவள் கண்கள்.!.

சிற்பத்திற்கு கண்கள் வைக்கப்படுவதில்லை, ரசிகனை அது கொன்றுவிடும் என்பதால்.!

சிலரின் கவிதைகளை உண்டு பசியாறுகிறது என் கண்கள்.!

சிற்பத்தின் கண்கள் சிதைக்கும் சில வயதினரை மட்டும்.!.

பேருந்தின் சத்தம் காதுகளில் கேட்கும் போதெல்லாம், பேருந்தின் எல்லா ஜன்னல்களிலும் உந்தன் ஒரு முகத்தை தேடி அலைகிறது எந்தன் இரு விழிகள்.!.

தூரத்தெரியும் அழகிய நிலவு அவள் முகம், அதில் இருக்கும் கருப்புவெள்ளை புள்ளிகள் அவளது கார்மேக கண்கள்.!.

உயிரோடு உரையாடும் உன் கண்கள், என்னோடு உரையாடும் உன் மௌனங்கள், என்னவோ கூற வந்து சொல்லவா என தயங்குகிறது.!.
தடுமாறுகிறது என் நெஞ்சம்.!.

கண்கள் இரண்டும் காணத்துடிக்கிறது, கண்முன்னே நீ வந்ததும் காண மறுக்கிறது, கண்களை கொஞ்சம் மூடடி, சொல்லிவிடுகிறேன் நினைத்ததை.!.

அரக்கி அவள் கண்கள், கிறுக்கு பிடிக்க வைக்கிறது என்னை, கிறுக்கி அவள் கொன்று புதைக்கிறாள் கண்களால் என்னை.!.

நடக்கும் திசையெல்லாம் அவள் கண்கள் மூடியே கிடக்கிறது,
நல்லவேளை கண்களை அவள் திறந்தால் நான் எழமுடியாத அளவுக்கு விழுந்துவிடுவேன்.!.

லூசு என்பதை கவிதையென்கிறது என் கண்கள்!

போதும் போ என்று உன் கண்கள் சொல்கிறது,
போகாதே நில் என்று உன் மௌனம் சொல்கிறது!
யார் பேச்சைக்கேட்பதென்று திணறி திக்குமுக்காடுகிறது என் கால்கள்!

என் கண்கள் உன்னை மட்டுமே சுற்றிதேடுகிறது, உன் எண்ணங்களோ என்னை மட்டுமே சுற்றித்திரிகிறது,
உன் மௌனம் கலையும் என நான் காத்திருந்தேன், உரைத்தது உன் கண்கள் மௌனம் கலைந்து நான் உன்னில் கலந்து வெகு நாட்கள் ஆனதென!

காதல் கண்ணிலெல்லாம் படாது, மனம் வெகுநாள் உரம் போட்டு வளர்க்கும், ஒருநாள் வெளிப்படும் கண்கள் வழியாக...!

இனைக்க முடியா கோலத்தின் புள்ளிகள் உன் கண்கள் கட்டும் மாயா ஜாலங்கள்!

அனிச்சை செயல்: நீ இருக்கும் திசையில் என் கண்கள் காணும் காட்சி அழகுதான்.

கண்கள் இல்லாதவன் காணும் அழகை நான் கனவில் கண்டு வாழ்கிறேன். அது ஒரு அழகான வாழ்க்கை..!

பிரியசகி உன்னை பிரிய மனமில்லாமல், கண்கள் மூடியே கனவில் வாழ்கின்றன என் காதல் வலியில்!?

களங்கரை விளக்கில்லா கடல் தானடி உன் கண்கள், விழுந்தேனடி திசைதெரியாமல் அல்லாடுகிறேனடி!?

பூவெல்லாம் பூக்குதே, உன் புன்னகை மட்டும் என்னை தாக்குதே, கண்கள் உன்னை மட்டும் நோக்குதே, கால்கள் நீயிருக்கும் திசையில் நடக்குதே..>!?

அழகே உன் கண்கள் செய்த முன்னேற்பாட்டால் என் கண்கள் படும் அவஸ்தையை நீ அறிய மாட்டாய்....உன் கண்களையே கேட்டு அறிந்துகொள்....!

உன்னிரண்டு 
குண்டு கண்கள் திறக்கும்போது என்னை கொன்று
இமைகள் மூடும்போது உயிர்பிக்கிறது என்னை..!

நீயும் என்னை நினைக்காமலே நெஞ்சமெல்லாம் நிறைகிறாய், காலம் ஓடாமலே கால்கள் ஆடுதே கண்கள் இரண்டும் உன்னை தேடுதே...!

விடியல் வருமோ இரவு நீளுமோ உன் முகத்தை காணுமோ என் கண்கள் கனவில் மட்டுமே முடியுமோ நேரில் காண நேராமல்...!

கண்ணன் சொல்லால் எய்த அம்பு கன்னியவள் காதுகளில் நுழைந்து,
திரும்பவும் கன்னியவள் கண்கள் வழியாக எய்த அம்பு கண்ணனை உறக்கமின்றி தவிக்கவிட்டது...!

அவள் வரும் திசை நாடி என் கண்கள், கொலுசின் சத்தம் நாடி என் காதுகள், வாசம் நாடி என் நாசிகள்!

உன்னை வரைந்த ஓவியத்தில் கண்கள் மட்டும் வரையப்படவில்லை...! வேறொருவன் கொல்லப்படக்கூடாது என்பதற்காக...!

சொல்லோடு விளையாடும் விழிகள் என்னை வைத்து கவிதை எழுதுகிறது! இது என்ன விந்தை!

ஆயிரம் விழிகள் என்னை தாக்கியிருந்தாலும் தடம் புரண்டதென்னவோ உன்னிரு விழிகளில் தானே!

உன் விழிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் என் வயது இன்னும் கண்டுகொல்லப்படாமல் உள்ளது!

சிரித்து பேசும் விழிகள் கண்ணை சிமிட்டிக்கொண்டே என்ன மொழி பேசுகிறதென்பதே புரியவில்லை!

காணும் காட்சிகளோடு என்னையும் சேர்த்து கரைத்து குடிக்கிறது உன் விழிகள்.!.

என் நிலையை மாற்ற முடியாமல் தவிக்கும்போதே நினைத்தேன், உன் விழிகள் என்னை நிலைப்படுத்தி இன்பம் காணுமென்பதை.!.

கதைகளை படிக்கும்போது, விழிகள் வழியாக இன்னொரு உலகத்தில் பயணித்து வீடு திரும்புகிறது என் உயிர் உடலை சேர....

விழிகள் உண்ட மிச்சத்தை வைத்து வாழ வழியில்லை எனக்கு.!.

மௌனத்தில் மரணத்தை பரிசளித்துவிட்டு வார்த்தைகளை கேட்கிறது விழிகள்....

உன் முகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் இரு விழிகள், என்னையும் புதைத்தே ரசிக்கிறதே!?

விழிகள் தூங்குமா, உனைப்பார்த்த வலியில்!?

பற்றி எரிந்த தீயில் எண்ணெய் ஊற்றியது உந்தன் இரு விழிகள் அல்லவா!?

சூரியன் அஸ்தமனம் மாலை மங்கிவிட்டது பறவைகள் வீடு திரும்புகிறது நான் உன்னை காண விழிகள் ஏங்குகிறது கனவில் வந்துவிடு ப்ளீஸ்....!

சந்திக்காத விழிகள் சிந்தித்தே கிடக்கும் மாறிமாறி இதைப்பற்றி அதுவும், அதைப்பற்றி இதுவும்....!

உன் இரு விழிகள் பேசுதே உலக மொழிகள் எல்லாம் வியந்து பார்க்கவே...!

எங்கோ இளங்குயிலின் இனிய கானம் கேட்டு விழிகள் திறந்தேன்....

அவள் வரும் வழி பார்த்து என் விழிகள், பாதங்கள் மட்டும் வலிக்கவில்லை பாதைகளுக்கும் வலிக்கிறது அவளை எதிர்பார்த்ததால்...!

கனவில் தொடர்ந்தது அவள் கரம் கோர்த்து நடத்தல்,
விழித்ததும் மூடியது விழிகள் நடந்தவையனைத்தும் கானல் நீரானதால்....

உன்னை சந்திக்காததால் எழுத வரிகளை சிந்திக்கிறது என் மனம்...! உன்னை சந்தித்தால் பேச மொழியின்றி சிந்திக்கும் என் விழிகள்...!

உறங்க மறுக்கும் விழிகள் என்னவளைக் காணாத ஏக்கத்தில், என் இதயமும் சேர்ந்து கொண்டது விழிகளோடு...!

என்னில் இல்லாதவளை மண்ணில் இருப்பாளென்ற நம்பிக்கையில் விழிகள் தேடி அலைகிறது செல்லும் வழியிலெல்லாம்...!

உன் வழியெல்லாம் தொடருதடி என் விழிகள் உன்னைத்தேடியே...!

என் வழியெல்லாம் இருள் உன் விழிகள் மூடியதால்...!

மொழியே இல்லாமல் மொழிபேசும் விழிகள் மட்டும்

கருநிற இருட்டில் காணாத கண்கள் கொன்றது என்னை.!.

உன் கண்கள் தாக்கினால் நான் எந்த மருத்துமனையில் சேரவேண்டுமென்பதை சொல்லிச்செல்....!

>>>>>>>>>>> செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்

No comments:

Post a Comment