Monday, January 11, 2016

கருவிழிகளின் தாக்குதலால் ஏற்பட்ட விளைவு.....!

கவிதைப்போர் நடக்கும்பொழுது முதலில் தோற்பது என் எழுதுகோல், இரண்டாவது என் கைகள், மூன்றாவது என் கண்கள், நான்காவது என் இதயம்.....உன் கண்களால்!

உன் கண்கள் எத்தனை தடவை என்னை பார்த்தாலும் அத்தனை முறையும் என் இதயம் கொஞ்சம் நின்று ரசித்துவிட்டு நீ சென்றதும் பிரிவை எண்ணி துடிக்கிறது.!.

கருப்பு வெள்ளை பூக்கள் நிறைந்த கண்கள் என்னை கொன்று புதைக்க எத்தனிக்கும் போதெல்லாம் நான் மெல்ல நகர்கிறேன், தப்பிக்க வழிதேடியே!

கண்கள் சராமாரியாக தாக்கியதால் பரபரப்பு பற்றிக்கொண்டது என் நெஞ்சில்!

நிந்தித்து என் மனம் நோகாமல் என் உயிரை கடத்துகிறது உன் கண்கள்.!.

தீட்டிய கருவிழிகள் திருடியது என் வயதை!

கண்கள் இரண்டும் கரட்டு மேட்டில் என்னை கிடப்பில் போட்டது.!.

காணாத என் கண்கள் காற்றில் ஆடும் மரக்கிளையாய் உன்னை தேடி சாய்ந்து சாய்ந்து பார்க்கின்றது...!

கருவிழிகள் காதலினை வீசி வயதை பந்தாடி ஒரு வழியாக இன்புறுமோ அதை மட்டும் மனதில் எண்ணி.!.

என் விழிகள் காணும் ஓவியங்கள் அனைத்தும் உயிர்பெற்று தவிக்கின்றன, ஏன் எனக்கு உயிர் கொடுத்து ரசித்தே வதைக்கின்றாய் என்று!

என்னை நிற்க வைத்தது நிற்கதியாய் அவள் கண்கள்.!.

சிற்பத்திற்கு கண்கள் வைக்கப்படுவதில்லை, ரசிகனை அது கொன்றுவிடும் என்பதால்.!

சிலரின் கவிதைகளை உண்டு பசியாறுகிறது என் கண்கள்.!

சிற்பத்தின் கண்கள் சிதைக்கும் சில வயதினரை மட்டும்.!.

பேருந்தின் சத்தம் காதுகளில் கேட்கும் போதெல்லாம், பேருந்தின் எல்லா ஜன்னல்களிலும் உந்தன் ஒரு முகத்தை தேடி அலைகிறது எந்தன் இரு விழிகள்.!.

தூரத்தெரியும் அழகிய நிலவு அவள் முகம், அதில் இருக்கும் கருப்புவெள்ளை புள்ளிகள் அவளது கார்மேக கண்கள்.!.

உயிரோடு உரையாடும் உன் கண்கள், என்னோடு உரையாடும் உன் மௌனங்கள், என்னவோ கூற வந்து சொல்லவா என தயங்குகிறது.!.
தடுமாறுகிறது என் நெஞ்சம்.!.

கண்கள் இரண்டும் காணத்துடிக்கிறது, கண்முன்னே நீ வந்ததும் காண மறுக்கிறது, கண்களை கொஞ்சம் மூடடி, சொல்லிவிடுகிறேன் நினைத்ததை.!.

அரக்கி அவள் கண்கள், கிறுக்கு பிடிக்க வைக்கிறது என்னை, கிறுக்கி அவள் கொன்று புதைக்கிறாள் கண்களால் என்னை.!.

நடக்கும் திசையெல்லாம் அவள் கண்கள் மூடியே கிடக்கிறது,
நல்லவேளை கண்களை அவள் திறந்தால் நான் எழமுடியாத அளவுக்கு விழுந்துவிடுவேன்.!.

லூசு என்பதை கவிதையென்கிறது என் கண்கள்!

போதும் போ என்று உன் கண்கள் சொல்கிறது,
போகாதே நில் என்று உன் மௌனம் சொல்கிறது!
யார் பேச்சைக்கேட்பதென்று திணறி திக்குமுக்காடுகிறது என் கால்கள்!

என் கண்கள் உன்னை மட்டுமே சுற்றிதேடுகிறது, உன் எண்ணங்களோ என்னை மட்டுமே சுற்றித்திரிகிறது,
உன் மௌனம் கலையும் என நான் காத்திருந்தேன், உரைத்தது உன் கண்கள் மௌனம் கலைந்து நான் உன்னில் கலந்து வெகு நாட்கள் ஆனதென!

காதல் கண்ணிலெல்லாம் படாது, மனம் வெகுநாள் உரம் போட்டு வளர்க்கும், ஒருநாள் வெளிப்படும் கண்கள் வழியாக...!

இனைக்க முடியா கோலத்தின் புள்ளிகள் உன் கண்கள் கட்டும் மாயா ஜாலங்கள்!

அனிச்சை செயல்: நீ இருக்கும் திசையில் என் கண்கள் காணும் காட்சி அழகுதான்.

கண்கள் இல்லாதவன் காணும் அழகை நான் கனவில் கண்டு வாழ்கிறேன். அது ஒரு அழகான வாழ்க்கை..!

பிரியசகி உன்னை பிரிய மனமில்லாமல், கண்கள் மூடியே கனவில் வாழ்கின்றன என் காதல் வலியில்!?

களங்கரை விளக்கில்லா கடல் தானடி உன் கண்கள், விழுந்தேனடி திசைதெரியாமல் அல்லாடுகிறேனடி!?

பூவெல்லாம் பூக்குதே, உன் புன்னகை மட்டும் என்னை தாக்குதே, கண்கள் உன்னை மட்டும் நோக்குதே, கால்கள் நீயிருக்கும் திசையில் நடக்குதே..>!?

அழகே உன் கண்கள் செய்த முன்னேற்பாட்டால் என் கண்கள் படும் அவஸ்தையை நீ அறிய மாட்டாய்....உன் கண்களையே கேட்டு அறிந்துகொள்....!

உன்னிரண்டு 
குண்டு கண்கள் திறக்கும்போது என்னை கொன்று
இமைகள் மூடும்போது உயிர்பிக்கிறது என்னை..!

நீயும் என்னை நினைக்காமலே நெஞ்சமெல்லாம் நிறைகிறாய், காலம் ஓடாமலே கால்கள் ஆடுதே கண்கள் இரண்டும் உன்னை தேடுதே...!

விடியல் வருமோ இரவு நீளுமோ உன் முகத்தை காணுமோ என் கண்கள் கனவில் மட்டுமே முடியுமோ நேரில் காண நேராமல்...!

கண்ணன் சொல்லால் எய்த அம்பு கன்னியவள் காதுகளில் நுழைந்து,
திரும்பவும் கன்னியவள் கண்கள் வழியாக எய்த அம்பு கண்ணனை உறக்கமின்றி தவிக்கவிட்டது...!

அவள் வரும் திசை நாடி என் கண்கள், கொலுசின் சத்தம் நாடி என் காதுகள், வாசம் நாடி என் நாசிகள்!

உன்னை வரைந்த ஓவியத்தில் கண்கள் மட்டும் வரையப்படவில்லை...! வேறொருவன் கொல்லப்படக்கூடாது என்பதற்காக...!

சொல்லோடு விளையாடும் விழிகள் என்னை வைத்து கவிதை எழுதுகிறது! இது என்ன விந்தை!

ஆயிரம் விழிகள் என்னை தாக்கியிருந்தாலும் தடம் புரண்டதென்னவோ உன்னிரு விழிகளில் தானே!

உன் விழிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் என் வயது இன்னும் கண்டுகொல்லப்படாமல் உள்ளது!

சிரித்து பேசும் விழிகள் கண்ணை சிமிட்டிக்கொண்டே என்ன மொழி பேசுகிறதென்பதே புரியவில்லை!

காணும் காட்சிகளோடு என்னையும் சேர்த்து கரைத்து குடிக்கிறது உன் விழிகள்.!.

என் நிலையை மாற்ற முடியாமல் தவிக்கும்போதே நினைத்தேன், உன் விழிகள் என்னை நிலைப்படுத்தி இன்பம் காணுமென்பதை.!.

கதைகளை படிக்கும்போது, விழிகள் வழியாக இன்னொரு உலகத்தில் பயணித்து வீடு திரும்புகிறது என் உயிர் உடலை சேர....

விழிகள் உண்ட மிச்சத்தை வைத்து வாழ வழியில்லை எனக்கு.!.

மௌனத்தில் மரணத்தை பரிசளித்துவிட்டு வார்த்தைகளை கேட்கிறது விழிகள்....

உன் முகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் இரு விழிகள், என்னையும் புதைத்தே ரசிக்கிறதே!?

விழிகள் தூங்குமா, உனைப்பார்த்த வலியில்!?

பற்றி எரிந்த தீயில் எண்ணெய் ஊற்றியது உந்தன் இரு விழிகள் அல்லவா!?

சூரியன் அஸ்தமனம் மாலை மங்கிவிட்டது பறவைகள் வீடு திரும்புகிறது நான் உன்னை காண விழிகள் ஏங்குகிறது கனவில் வந்துவிடு ப்ளீஸ்....!

சந்திக்காத விழிகள் சிந்தித்தே கிடக்கும் மாறிமாறி இதைப்பற்றி அதுவும், அதைப்பற்றி இதுவும்....!

உன் இரு விழிகள் பேசுதே உலக மொழிகள் எல்லாம் வியந்து பார்க்கவே...!

எங்கோ இளங்குயிலின் இனிய கானம் கேட்டு விழிகள் திறந்தேன்....

அவள் வரும் வழி பார்த்து என் விழிகள், பாதங்கள் மட்டும் வலிக்கவில்லை பாதைகளுக்கும் வலிக்கிறது அவளை எதிர்பார்த்ததால்...!

கனவில் தொடர்ந்தது அவள் கரம் கோர்த்து நடத்தல்,
விழித்ததும் மூடியது விழிகள் நடந்தவையனைத்தும் கானல் நீரானதால்....

உன்னை சந்திக்காததால் எழுத வரிகளை சிந்திக்கிறது என் மனம்...! உன்னை சந்தித்தால் பேச மொழியின்றி சிந்திக்கும் என் விழிகள்...!

உறங்க மறுக்கும் விழிகள் என்னவளைக் காணாத ஏக்கத்தில், என் இதயமும் சேர்ந்து கொண்டது விழிகளோடு...!

என்னில் இல்லாதவளை மண்ணில் இருப்பாளென்ற நம்பிக்கையில் விழிகள் தேடி அலைகிறது செல்லும் வழியிலெல்லாம்...!

உன் வழியெல்லாம் தொடருதடி என் விழிகள் உன்னைத்தேடியே...!

என் வழியெல்லாம் இருள் உன் விழிகள் மூடியதால்...!

மொழியே இல்லாமல் மொழிபேசும் விழிகள் மட்டும்

கருநிற இருட்டில் காணாத கண்கள் கொன்றது என்னை.!.

உன் கண்கள் தாக்கினால் நான் எந்த மருத்துமனையில் சேரவேண்டுமென்பதை சொல்லிச்செல்....!

>>>>>>>>>>> செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்

👍நல்லவன்👍👍👍👍👍👍👍👍👍👍


நல்லவன் நடிக்கிறான்னு சொல்றவங்க எல்லாரும்,
நல்லவனா நடிக்கிற எந்த கெட்டவன்கிட்டையோ ஏமாந்திருப்பாங்க!
அதுக்கு நல்லவன் ஒன்னும் பண்ணமுடியாது!

கெட்டவன்'னு பேரெடுக்க ஒரே ஒரு தப்பு பண்ணா போதும்....
நல்லவன்'னு பேரெடுக்க அந்த ஒரு தப்ப கூட பண்ணாம இருக்கனும்....

சந்தர்ப்பம் கிடைப்பவன் அயோக்கியன் ஆகிறான்
சந்தர்ப்பத்தை கடப்பவன் நல்லவன் ஆகிறான்

நல்லவன் நடிக்கிறான்னு சொன்னீங்கனா....
நான் நல்லவனா நடிக்கவாவது செய்யுரனே, நீங்க ரசிச்சிட்டு போய்விடுங்கள் என்னை நடிகனாவாவது!

நல்லவனுக்கு நடிக்கதெரியாது,
நடிப்பவனின் நல்லவன் வேடம் நீடிக்காது!

நடிக்கிறவனா இருந்தா நல்லவன்னு சொல்றீங்க..
நல்லவனா இருந்தா நடிக்கிறான்னு சொல்றீங்க..
உங்களுக்கு நல்லவன் வேணுமா நடிகன் வேணுமா..சிக் சமூகமே.!?!

இன்றைய நல்லவன் என்றுமே நல்லவன்தான்,
சூழ்நிலையை யாரும் உருவாக்காதீங்க?

நல்லவனுக்கு இருட்ல என்னடா வேலைனா கேக்குற, டேய் முட்டாள் தூங்கும்போது உனக்கு நல்லவனா காட்ட நான் லைட்ட போட்டா தூங்கமுடியும்...

நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணன்ம்னு....

நல்லவ'னு பேர் எடுக்க ரொம்ப கஷ்டபடனும்
கெட்டவன்னு பேர் எடுக்க கஷ்டபடதேவையில்லை
இன்பம் மட்டும் இஷ்டப்பட்டு நல்லவன்ட்டதா போகும்...

நல்லது பண்ணனும்னு நினைக்கிறத விட, கெட்டது பண்ணகூடாதுனு நினைச்சாலே போதும்!
நீ நல்லவனா மாறிடுவ!

யாரோ: எவ்ளோ நாள் நீ நல்லவனா இருப்ப, நான் பாக்குறேன்.
நான்: பாக்க நீ இருக்கமாட்ட, செத்துருப்படா.

சேர்க்கை சரியில்லனா கர்ணனோட முடிவுதான் உனக்கும், நீ நல்லவனா இருந்தாலும்...
நியதி:பெரியவங்க சொல்பேச்சை கேட்கனும்..
இல்லனா ஆப்பு கன்பார்ம்...

நல்லவனா இருக்குறது இன்பம்,
கெட்டவனா இருக்குறது தினம் தினம் துன்பம்

கெட்டவனா வாழ்ந்து கிடைக்கிற அரியணை வேணா...
நல்லவனா வாழ்ந்து கிடைக்கிற வெறும் தரை போதும்....

கண்ணை பார்க்கும்போது நல்லவனாக இருக்கிறேன்..
கண்ணுக்கு கீழே பார்க்கும்போது நான் நல்லவனா கெட்டவனா என்பதை உன் உடையே தீர்மானிக்கிறது...!


- மணிகண்டனின் ஆதங்கங்கள்..!

❤அம்மா❤ என் ❤அம்மா!❤


பெண்ணவள்
பொன்னவள்
மென்னவள்
ஒளியவள்
ஒலியவள்
விழியவள்
வழியவள்
இதயமவள்
உதயமவள்
தெய்வமவள்!

கவிதை எழுத முற்படும்போதெல்லாம் மனதில் எழும் முதல் கவிதையாக!

என்னை தீண்டும் ஒளியெல்லாம் உன் கண்களின் வழியாகவே வரவேண்டும் என்ற வரமே வேண்டும்!

எல்லாம் நீயே என் தாயே!
என்னுள்ளம் நீயே என் தாயே!
உன்னுள்ளம் என் வீடு என் தாயே!
என் சொல்லும் நீயே என் தாயே!
என் செயலும் நீயே என் தாயே!
மொத்தம் நீயே என் தாயே!
என்னுலகத்திற்கு நீயே வானம் தாயே!
என் இரவில் நீயே நிலவு தாயே!
சுற்றும் பூமி நீயே என் தாயே!
என் பகலில் நீயே சூரியன் தாயே!
என்னை மரமாய் வளர்தாய் என் தாயே!

அவளோடு கைகோர்த்து பின்னால் நடந்தேன், என் காலில் துளி கூட காயமில்லாமல், கல்லும் முள்ளும் அவள் கால்களில் ஏற்றுக்கொண்டுவிட்டதால்.....!

நான் சிதறிய வண்ணங்களில் புள்ளி வைத்து கோலம்போட்டு அழகாக்கிவிட்டாள்!

என் நொடி நீ
என் நிமிடம் நீ
என் வாழ்கை நீ
என் வாழ்வே நீ

கொடுத்து வைத்தவன் நான், வயிற்றிலிருந்து ஈரைந்து மாதத்தில் இறக்கிவிட்டு, இறக்கும்வரை என்னை இதயத்தில் சுமக்கிறாயே...!

கவிதையெல்லாம் கழுத்தை நெரிக்கிறது, உன்னையும் எழுதவேண்டுமென்றல்ல, உன்னை மட்டுமே எழுதவேண்டுமென...!

உன் முந்தானையில் மூடி எனை அழைத்துச்சென்றால் முப்பது ஜென்மம் ஆனாலும் அப்படியே வாழவேண்டுமம்மா....!

உனக்கு மட்டும்
உன்னால் மட்டும்
உன்னில் மட்டும்
நான்_மகனாக

சேலை முந்தானையில் பிள்ளையை மூடிக்காப்பாளே அதைவிட பாதுகாப்பு வேறு யாரால் அளிக்க முடியும் இப்பூவுலகில்.

நான் வியக்கும் அதிசயம் என் பாதையை கடவுள் இன்னொரு கடவுளிடம் அமைக்க சொன்னதால் என்னவோ இவ்வளவு அழகாக பாதையை அமைத்துவிட்டாள்...!

கடவுளைக் கண்டால் எனைக்காக்க கடவுளின் கருவுக்குள் எனைக்கடத்திய உனக்கு கோடி நன்றிகள் என்பேன்.

அடுத்த நொடி என்ன வரம் வேண்டுமென்றால் என் தாய் மடியில் மரணம் வேண்டும் என்பேன்..!

உலகத்தில் முதல் உணர்வீ
குழந்தை அழும் சத்தம் கேட்டு அறிவாள்
பசியா
தூக்கமா
எறும்பு கடியா
இன்னும் நீளும் பட்டியல்...

எனக்கு பெண்களை பற்றி தெரியாது,
ஆனால் ஒரு பெண்ணை பற்றி அவளைவிட நன்றாக எனக்கு தெரியும்.

பத்தாண்டுகள் அவள் மண் சுமந்ததற்கு பத்தாயிரம் ஆண்டுகள் பணிவிடை செய்தாலும் கூலி தர முடியா முதலாளியானேன்...!

அன்பில் அவள் விதைத்த விதைகள் நான் நடக்கும் சாலையெல்லாம் எனக்கு நிழலாய் என்னோடு மரமாக வளர்ந்து நடைபோடுகின்றன....!

உழைத்து பழகிவிட்டதால் ஓய்வெடுக்க மறுக்கிறாள்....!

வாழ்க்கையை வாழ அவளெனக்கு கற்று கொடுக்கவில்லை
அவள் வாழ்ந்த வாழ்க்கைதான் எனக்கு வாழ கற்பித்தது...!

உளியில்லாமல் ஒளியில் அவளென்னை சிற்பமாக்கிய சிற்பியவள்....!

எனக்காக நடந்து கடந்த தூரத்தின் கடனை முடிக்கவே பிறவிகள் கோடி வேண்டும்!
அவள் ஆற்றிய மற்ற செயல்களுக்கு எண்ணிலடங்கா பிறவிகளெனக்கு வேண்டும்!

அவள் மண்வெட்டியை இருகையில் பிடித்து
என் ஒரு கையில் எழுதுகோலை பிடிக்கவைத்தாள்....!

மழையாக அன்பை என் மேல் அவள் பொழியவே அவள் வயிற்றில் மழலையாக எனைச் சுமந்து ஈன்றாளோ..!

பத்து மாசம் இருட்ல இருந்ததுக்கு வெளிய வந்தவொடனே வாழ்க்கை முழுதும் வெளிச்சமாக்கிவிட்டாள்

பூக்கள் கொட்டிய சாலையில் நான் சென்றேனா
இல்லை பூக்களெல்லாம் என் சாலையில் கொட்டிவிட்டாளா...

கொடி மல்லி பூத்து தரும் வாசம் அவள் மடி தரும் வாசத்தின் அருகில் கூட நெருங்க முடியாது...!

கண்ணுக்குள் எனைவைத்து காத்தாள்
மண்ணில் விதைத்தும் எனை காக்கிறாள்!

கொடுத்து வைத்தவன் மனிதன் கடவுளோடு வாழ்கிறான்...!

தன்னுள் வளர்த்தாள்
தூக்கி வளர்த்தாள்
தாங்கி வளர்த்தாள்!

பாதையெல்லாம் அவள் பாதங்கள் ஏற்படுத்திய தடங்கள்...
தடங்கல்களே இல்லா பாதையை எனக்கு அமைக்க..!

அரவணைப்பில் தாயை மிஞ்சிய உயிரெதுவுமில்லை இவ்வுலகில்...!

நடை பாதையெல்லாம் அவள் பாதச் சுவடுகள்
நான் செல்லவே உருவாக்கப்பட்டவை...!

முத்தச்சுவடுகள் முகத்தில் மறைந்தாலும்
முத்தச்சத்தங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன..!

பாதம் பற்றியே நடக்கிறேன் பயத்தில்
எங்கே உன் பாதத்தை விட்டு என் பாதையை மாற்றிவிடுமோ காலம் என்று...!

உழைப்பதிலும் உயர்த்துவதிலும் என்னை பிரமிக்க வைக்கிறாள்...!

அவள் பாதத்தின் தடம் பார்த்தே என் பாதைகளை அமைக்கிறேன்...!

சுவாசிக்க கற்று தந்தவள் நீ
அதனால்தான் இன்னும்
நேசித்து கொண்டிருக்கிறேன!

உடலினை பிரித்து
உயிரினை கலந்து
அன்பால் வளர்த்து
அறிவை புகுத்தி
உலகில் விட்டாள்....!

நானறிந்த என்னை புரிந்த எனக்கு புரியாத புதிர்...!

அடை மழை அவள் அன்பு எப்போதும்..!

என்
வழியும் நீயே
வழித்துணையும் நீயே
வாழ்வில் தூணும் நீயே
என் தாயே..!

நான் பார்த்த முதல் பெண்ணியவாதி...!
அவள் பெண்ணியம் பேசியதே இல்லை
நடத்திக்காட்டினாள்...!

நான் பார்த்த முதல் பெண்ணியவாதி...!
அவள் பெண்ணியம் பேசியதே இல்லை
நடத்திக்காட்டினாள்...!

15வரை
அவள் எண்ணம்போல்
என்னை வண்ணமாக்கினாள்...!
16முதல்
என் வண்ணம்போல்
அவள் எண்ணத்தை மாற்றினாள்..!

நான் அறிந்த ஒரே பெண்ணவள்
நான் அறிய முயலும் ஒரே பெண்ணுமவள்..!

எழுத்தறிவித்தவன் இறைவனானால் - ஆசிரியர்
அதற்கு காரணமானவள் இறைவனின் இறைவன் - அம்மா!

நான் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
அதில் அவளே நிறைந்திருப்பாள்..!

அன்னையவள் அடிபாதம் நோக
என் மனம்கூட நோகாவண்ணம் மண் சுமைதாங்கி எனைக்காத்தாள்...!

மின்னும் பொன்னல்ல
பிரதிபலிக்கும் வைரமல்ல
ஜொலிக்கும் நட்சத்திரமல்ல
குளிர்தரும் நிலவல்ல
விலையுயர்ந்த மாணிக்கமல்ல
ஒப்பில்லாதவள்!

தாயை நேசிக்காதவன் கடவுளை படைத்தான்,
கடவுளே தாயாக பிறந்து அவனை நேசித்தாள்...!

அம்மா! என் அம்மா!

இது வெறும் தொடக்கம் மட்டும் தானம்மா..!

- S.மணிகண்டன் சன் ஆப் செண்பகவள்ளி
I never loved a girl
A girl loves me 24x7, guess who, my mom.

என் நண்பன் நீயடா! என் ❤த்தில் நீயடா


உன்னோடு பழகிய நாட்களை பகிர்கிறேன் தனிமையோடு நினைவுகள் என்ற பெயரில்...!
பார்த்தாலே பரவசம் தருவாயடா!
தட்டி கொடுத்து கட்டிப் பிடித்த முதல் காலம் நீயடா! 
என்னையும் மாலுமி ஆக்கிய பெருமை உன்னைத்தானடா சேரும்...!
கைகோர்த்து முகத்தில் புன்னகை வீசி பள்ளி நாட்களில் ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகளைப் போல வளம் வந்தோமடா..!
புள்ளி மானைப்போல துள்ளி விளையாடிய பள்ளி நாட்கள் நாம் வாழ்கையை வாழ்ந்த நாட்களடா!
நாம் பொறாமைப் படாமல் பிறரை பொறாமைப்பட வைத்தொமடா நம் நட்பை பார்த்து...!
மழைக்காலத்தில் நீ தந்த சாக்கு'பை குடையில் நான் நனைந்து சென்றேனடா உன் நட்பெனும் மழையில்!
நீ பாதி கடித்துத்தந்த கடலை மிட்டாய் இன்னும் என் நெஞ்சில் நிறைந்து இனிப்பான நினைவுகளாக இனித்துக்கொண்டே இருக்குதடா!
மதம் மொழி இனம் நிறம் - வேறுபாடில்லா நட்பை நீ சொல்லித் தந்தாயடா!
மொட்டுகளாய் இருந்தபொழுதே மொத்தமும் தந்தாயடா பாசத்தை முழுதும் சுவாசமாக...!
கள்ளமில்லா உள்ளம் ஒன்று உண்டென்றால் அது உன் உள்ளம் மட்டும்தானடா!
எதிர் பாராமல் உதவி செய்த உன் இன்பமுகத்தை என் அகக்கண்கள் இன்னும் மறக்கவில்லையடா!
தங்கத்தட்டில் உண்டாலும் தகரத்தட்டில் உன்னோடு உண்டதே உணவாக இருந்ததடா!
பகிர்ந்துன்னுதலை பார்த்ததே உன்னிடம்தான்...கற்றதும் உன்னிடம்தான்!
தூக்கிவிட்ட நாட்களை விட நீ என்னை உயர்த்தி விட்ட நாட்களே அதிகமடா!
நீயிருந்த நேரமெல்லாம் நான் இறக்கவே நேரிட்டது உன் நட்பில்...!
உலகம் மறந்து உவகையில் நானிருந்த நாட்கள்...உன்னோடுதானடா!
உன்னோடு சிரித்த நாட்கள்...உள்ளத்தோடு நீ சேர்த்த நினைவுகள்!
நீ உடைத்துத்தந்த பல்பத்தில் நான் அன்றே எழுதினேனடா நீ தான் என் நண்பன் என்று!

என்னுயிரில் உன் நினைவுகளை சேர்த்தே உயிரோடு வாழ்கிறேனடா!

என் நண்பன் நீயடா!

- செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்